Pages

Thursday 20 June 2013

கொங்கதேச குடிகள் 18

கொங்க குடிகள் 18 :


௧.கொங்க பிராமணர் (ஸ்மார்த்தர், ஆதி சைவர், குருக்கள்)

௨.கொங்க வெள்ளாளர்(தென்திசை/செந்தலை வெள்ளாளர்)
௩.கொங்க செட்டியார் (வெள்ளாஞ்செட்டி, எண்ணெய் செட்டி, வணிக செட்டி)
௪.கொங்க பண்டாரம் (கோமானாண்டி/உவச்சாண்டி/பூவாண்டி)
௫.கொங்க புலவர் (புலவன்/பண்பாடி/தக்கைகொட்டி,கூத்தாடி)
௬.கொங்க கம்மாளர் (ஆசாரி) - (கொல்லன்/தச்சன்/தட்டான்/கருமான்/கல்தச்சன்)
௭.கொங்க குசவர் (குலாலர்)- (குயவர்/மண்ணுடையார்)
௮.கொங்க கைக்கோளர் (முதலியார்)
௯.கொங்க சாணார்
௰.கொங்க உப்பிலியர் (கற்பூர செட்டியார்)
௧௧.கொங்க கருணீகர் (கணக்குப்பிள்ளை)
௧௨.கொங்க நாவிதர்
௧௩.கொங்க வண்ணார்
௧௪.கொங்க ஊழியர் (தொண்டன்/குறவன்)
௧௫.கொங்க பள்ளர்
௧௬.கொங்க போயர்
௧௭.கொங்க பறையர்
௧௮.கொங்க மாதாரி

கொங்க பிராமணர்
(ஸ்மார்த்தர், ஆதி சைவர், குருக்கள்)
குலகுருக்கள், கோவில் அர்ச்சகர்கள் 

கொங்க வெள்ளாளர்
(தென்திசை/செந்தலை வெள்ளாளர்)கொங்க செட்டியார்கொங்க செட்டியார்- வெள்ளாஞ்செட்டி, எண்ணெய் செட்டி, வணிக செட்டி


மரச்செக்கில் நல்லெண்ணெய் ஆட்டி விற்பது, வியாபாரம் போன்றவை செட்டியார்களின் தொழில். மரசெக்கு எண்ணெய்யை கைவிட்டதன் பலன் இன்று கொலஸ்ட்ரால், இதய நோய் உட்பட கணக்கில் அடங்கா நோய்களை அனுபவிக்கிறோம்.சோழ நாட்டில் காவிரியாற்றில் சோழன் தளபதி குளிக்கும் இடத்தில் குளித்த செட்டிப்பெண்ணை, தளபதி கொன்றுவிட நியாயம் வேண்டி நின்ற செட்டிமார்களுக்கு துணையாக வெள்ளாளர்கள் தளபதி மேல் போர் தொடுத்து கொன்றார்கள். வெள்ளாளர் (தொண்டை தேச பிரிவின் பின் ஆதொண்டனோடு விரோதம் கொண்ட போது) கொங்க தேசம் வந்தபோது செட்டிமார்களும் கூட வந்துவிட்டனர். பெருங்குடி கூட்டத்து குன்னுடையான் என்கிற நெல்லியங்கோடன் பங்காளிகளால் விரட்டப்பட்ட போது ஆதரித்து காத்தவர் வணிகர் குல செட்டியார்.சில காணிகளில் காணியுரிமை உடையவர்கள். பல காணிகளை கொங்கு வெள்ளாளர் செட்டியார்களிடம் இருந்து பொருள்கொடுத்து பெற்ற செப்பேட்டு சாசனங்கள் உள்ளன.தூரன்பாடி மயில கூட்ட தலைவர் பங்காளிகளால் கொல்லப்பட்ட போது கர்ப்பிணியான அவரின் மனைவி செட்டியார் வீட்டில் அடைக்கலமாக இருந்தார். மகன் பிறந்து வளர்ந்த பின்னர், காநியுரிமை கேட்டு சென்றபோது அவரின் கூற்றுக்கு சாட்சியாக செட்டிமார் துணை நின்றனர். வெள்ளகோவிலில் காய்ச்சிய மழுவை கையிலேந்தி சத்தியம் செய்து மகனின் காணியுரிமைக்கு நிரூபித்தார்.செட்டிகுமாரசாமி கொங்க வெள்ளாளர் வழிபாடு தெய்வங்களில் ஒருவராவார்.

கொங்க பண்டாரம்
கொங்க பண்டாரம் - கோமானாண்டி/உவச்சாண்டி/பூவாண்டி/மொடவாண்டி 

கோமானாண்டி - கோவில் பணிகள் செய்பவர் 
உவச்சாண்டி - கோவிலுக்கு சமையல் பணிகள் செய்பவர்
பூவாண்டி - இறைவனுக்கு பூக்கட்டுபவர் 
மொடவாண்டி - முட குழந்தைகளை காக்கும் பொறுப்பு உடையவர்கள். கோவிலில் ஆன்மீக சொற்பொழிவு, பணிகள் செய்பவர்கள். முடவாண்டி பட்டயம் காண்க.


கொங்க தேசத்தில் கோவிலுக்குள் இறைவனின் பணிகளுக்கு முழு பொறுப்பும் உரிமையும் பண்டார மக்களுக்கே உரியது. அந்த காணிக்குரிய பரம்பரை பண்டாரம் பூசை செய்தால் தான் இறைவனே மனம் குளிர்ந்து ஏற்று கொள்வார். கொங்க வெள்ளாளரில் கன்ன கூட்டத்தார் தலைய நாட்டில் பள்ளிகளோடு ஏற்ப்பட்ட பிரச்சனையின் பின்பு மிகுந்த உதவி செய்தவர்கள் பண்டார வகையறா. நல்லராண்டி பண்டாரம் பட்டக்காரர் மகனான முத்துசாமி கவுண்டரை வளர்த்து மீண்டும் பட்டக்காரர் ஆக உதவி புரிந்தார். பட்டகாரர்கள் இல்லாத போதும் காணியாச்சி கோவில் பூசைகளை சரிவர செய்து வந்தார். முத்துசாமி கவுண்டர் திருமணத்தின் போதும் உதவி செய்தவர். அவரின் ராஜ விசுவாசத்தை மெச்சி, மோரூர் நாட்டின் (இன்றைய திருச்செங்கோடு உள்ளிட்ட பெரும்பகுதி) 60 காங்கேயர்களும் (பட்டக்காரர்) சேர்ந்து 61 ஆவது பட்டக்காரராக நல்லராண்டியை அங்கீகரித்து கவுரவித்தனர். இதில் மோரூர் நாட்டின் முதல் பட்டகாரரான சூர்ய காங்கேய மன்றாடியாரும் அவர்தம் பங்காளிகளும் கையெழுத்திட்டுள்ளனர். இறுதியில் முத்துசாமி கவுண்டர் மறைந்த போது அவரின் பிரிவை தாங்காமல் நல்லராண்டியும் அவரின் மனைவியும் பட்டக்காரர் முத்துசாமியுடன் தீக்குளி இறங்கி உயிரை விட்டுவிட்டனர்!

(ஆதாரம்: கன்னிவாடி கன்னகுல பட்டயம்)

கொங்க புலவர் 
(புலவன்/பண்பாடி/தக்கைகொட்டி,கூத்தாடி)கொங்க கம்மாளர் (ஆசாரி) 
(கொல்லன்/தச்சன்/தட்டான்/கருமான்/கல்தச்சன்)கொங்க குசவர் (குலாலர்)
(குயவர்/மண்ணுடையார்)

மண் பாண்டங்கள் செய்வது தொழில் .

திருநீலகண்ட நாயனார் வழி வந்தவர்கள்.நாட்டாரை அவமதித்ததால் மன்னர் துணையோடு குலாலர் குறும்படக்கிய செய்தி மதுக்கரை பட்டயத்தில் உள்ளது. பெரியகாண்டியம்மனுக்கு மண் சட்டி தர மறுத்ததால் சட்டிக்குள் பாம்புகள் வந்திருக்க, மன்னிப்பு கோரிய குலாலருக்கு பெரியகாண்டியம்மன் அருள் புரிந்த செய்தி உள்ளது. குலாலர் பலர் வீரமலை அண்ணன்மாரையும், பெரியகாண்டியம்மனையும் மாறா பக்தியுடன் வணங்குவர்.


பண்டிகை காலங்களில் குதிரை, பசு போன்ற மண் உரு செய்து ஊராருக்கு தருவர். கொங்க கைக்கோளர் (முதலியார்)

ஆடை நெய்து தருவது கொங்கதேச முதலியார்களின் குலத்தொழில். 


இடங்கை சாதியாவர். இவர்கள் குலகுரு ஈரோடு வீரப்பன் சத்திரம் அருகே உள்ளார். இறையமங்கலம் செங்குந்தர் மடமும் இவர்களை சார்ந்ததே.
அண்ணமார் சுவாமிகள் காட்டிற்கு சென்ற போது பொன்னி வளநாட்டை கொள்ளையிட வந்த தலையூர்காளியின் வேட்டுவபடை முதலிப்பெண் குப்பாயியை கடத்தி சென்றது. அண்ணமார் திரும்புவதை அறிந்து பயந்து காட்டுக்குள் திக்கு தெரியாது சுற்றிய வேட்டுவ கொள்ளைகூட்டத்தை அழித்து அண்ணன்மார் குப்பாயியை மீட்டனர். சிறை எடுக்க பட்ட பெண் என்பதால் ஏற்றுகொள்ள மாட்டோம் என்று மறுத்துவிட்டனர் கைக்கோளர் உறவினர். அண்ணன்மார் அடைக்கலம் தந்து தங்கை அருட்கண்ணி தங்கத்திடம் குப்பாயியை ஒப்படைக்க தனது தங்கையாக எண்ணி குப்பாயியை காத்தார் அருட்கண்ணி தங்கம். மகப்பேறு இல்லாமையால் மோரூர் கன்ன குல காங்கேய மன்றாடியார் செய்த யாகத்தில் தன் ராஜ விசுவாசத்தால் தலையை அறுத்து தன்னை பலி தந்தார் நல்லான் என்னும் செங்குந்த முதலியார். அவரின் தியாகத்திற்கு கைமாறாக திருச்செங்கோட்டிலும் மலைக்கோவிலிலும் சில உரிமைகளை மோரூர் காங்கேயர் கொடுத்தனர்.
கொங்க சாணார்

திருசெங்கோடு கருமாபுரத்தில் கொங்க சாணார் குலகுரு மடம் உள்ளது.


வெள்ளோடு சமஸ்தானத்தில் ஒரு காணியின் கால் பங்குக்கு உரிய காணியாளர்களாக சாணார்கள் உள்ளார்கள். உலகபுரம் பட்டகாரருக்கு உற்ற துணை.
கொங்க உப்பிலியர் (கற்பூர செட்டியார்)

உப்பு காய்ச்சுவது குலத்தொழில். கிணறு தோண்டுவது உட்பட சில பணிகளும் செய்து வந்தார்கள். வெள்ளையன் உப்பு வரி போட்ட பிறகு உப்பு காய்ச்சுவது நின்று போனது.


இவர்கள் குலகுரு ஈரோடு மாவட்டம் நஞ்சை ஊத்துக்குளியில் உள்ளார். 


பூந்துறை காடை குலத்தைச் சேர்ந்த அழப்பிச்சாக் கவுண்டர் என்பவர் விசயநகர மன்னர் அரண்மனையில் உள்ள ஒரு அடங்கா குதிரை ,ஏறினால் தண்ணீரில் தள்ளும் அக்குதிரையை அடக்க அடிவயிற்றில் சுண்ணாம்புக் கல்லைக் கட்ட யோசனை கூறிய தன் மெய்க்காப்பாளன் உப்பிலிய சமுதாயம் நியாயம் பேச பூந்துறையில் கட்டி கொடுத்த மேடை இது..


கொங்கு உப்பிலிய சமூகம் கொங்கு பதினெட்டு சாதிகளுள் ஒன்று. கொங்கு நாட்டின் பூர்வ குடிகளில் ஒன்று. சாரை மண் கொண்டு உப்பு காய்ச்சுவது, வெடியுப்பு தயார் செய்வது உட்பட கெமிஸ்ட்ரி பணிகளில் சிறந்தவர்கள். பின்னாளில் வெள்ளையர் சதியால் உப்பு காய்ச்சும் தொழிலை விட்டு கட்டட பணிகளுக்கு சென்றுவிட்டனர் (இரு நூற்றாண்டுகள் முன்).


கொங்குநாட்டின் பதினெட்டு சாதிகளுக்கும் இருப்பது போல, இவர்களுக்கும் குலகுரு உண்டு. அவர் ஈரோடு நஞ்சை ஊத்துக்குளியில் உள்ளார். தற்கால சூழலில் பொருளாதார நிலையில் பின்தங்கி இருபினும் இன்னும் தங்கள் குலகுருவை மறவாமல் இருப்பது மிகவும் பாராட்ட தக்க விஷயம். 


கொங்க கருணீகர் (கணக்குப்பிள்ளை)கொங்க நாவிதர்

சவரம் செய்வது, மருத்துவம் பார்ப்பது, நல்ல-கெட்ட செய்திகளை தூதுவனாக கொண்டு செல்வது தொழில்.


சீர் சடங்குகள் செய்விப்பது, மங்கள வாழ்த்து பாடுவது உரிமைகள்.


வாலிபுல்லா கவுண்டன் கதை. கவுண்டருக்கு சவரம் செய்த வேட்டுவ நாசுவன் வேட்டுவ பட்டக்காரன் வந்தபோது இடையில் சென்றுவிட்டான். சவரம் முழுமையாகவில்லை. சவரம் செய்ய தன் மகனை கவுண்டர் அழைத்து செய்யவைத்தார். 


பின் இது குறித்து வழக்கு வர, வேட்டுவ நாசுவன் சமைத்த உணவை கொங்கர் வீட்டு நாய் முகர்ந்து கூட பார்க்காமல் சிறுநீர் கழித்து திரும்பி வழக்கில் வெற்றி பெற்றனர்.அபுத்ரீகம் முறைப்படி அந்த மகனுக்கும் கொங்கு 24 நாடுகளிலும் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கும் செட்டியார் பெண் திருமணம் செயவிக்கபட்டு கொங்க நாவிதர் என்ற புது சாதி உருவாக்கப்பட்டது.நாவிதருக்கு மங்கலன் என பெயர். தீட்டு இல்லாதவர். திருமணத்தின் போது பெண் வீட்டு நாவிதர் மணமகனின் உடல் முழுவதும் சவரம் செய்வார். அப்போது ஆண்மை தொடர்பான வியாதி உள்ளதா என கண்டறிந்து சொல்லிவிடுவார்.மங்கல வாழ்த்து இல்லாது திருமணம் முழுமை பெறாது. 


கொங்க வண்ணார்

துணிகள் வெளுப்பது, கைக்கோளர் செய்த புதிய துணிகளுக்கு சாயமிடுவது தொழில்.


கோவில் மற்றும் இல்ல சடங்குகளில் மாத்து விரிப்பது, பந்தம் பிடிப்பது கொங்க வன்னாரின் உரிமைகள் வீரபத்திரர் வழி வந்தவர் என்ற நம்பிக்கை உண்டு. இந்த சாதியில் பலரின் பேரும் வீரபத்திரன் என்று இருப்பதை காணலாம். தட்சணை கொன்றதால் ஏற்பட்ட பிரம்மஹத்தி தோஷம் நீங்க புண்ணிய காரியமான ஆடைகளை தூய்மை செய்வதை சிவபெருமான் வீரபத்திரருக்கு உபதேசித்தார்.கர்நாடகத்திலும் இன்ன பிற பகுதிகளிலும் வீரபத்திரருக்கு நிறைய கோவில்கள் உள்ளன. தமிழ்நாட்டிலும் இறு கோவில்கள் உள்ளன. சிவாலய சுவர் மற்றும் தூண சிற்பங்களில் வீரபத்திரர் சிற்பம் இருக்கும்.
கொங்க ஊழியர் 
(தொண்டன்/குறவன்)கொங்க போயர்கொங்க பள்ளர்கொங்க பறையர்கொங்க மாதாரி